search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை ரியல் எஸ்டேட் அதிபர்"

    கோவை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
    திருப்பூர்:

    கோவை வரதராஜபுரத்தை அடுத்துள்ள எம்.கே. தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்த கோபால் (66). ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவருடன் தொழில் ரீதியாக கோவையை சேர்ந்த டென்னிஸ் பழகி வந்துள்ளார். இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்த கோபாலிடம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி உள்ளார்.

    இதற்கு நடந்த கோபாலும் சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 26-ந் தேதி நந்த கோபாலை சந்தித்த டென்னிஸ் திருப்பூரில் உள்ள தனது நண்பர்களையும் சீட்டு நிறுவனத்தில் சேர்த்து விடலாம் என கூறி இருக்கிறார்.

    இதனை தொடர்ந்து டென்னிஸ், நந்தகோபால் காரிலே அவரையும், அவரது நண்பர் ராமமூர்த்தியையும் திருப்பூரை அடுத்துள்ள கணியாம் பூண்டி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு டென்னிஸ் நண்பர்களான செல்வா, போலீஸ் கார்த்தி, ரகு ஆகியோர் ஒரு வீட்டில் இருந்தனர்.அங்கு நந்த கோபால், ராமமூர்த்தி ஆகியோரை அழைத்து சென்று அவர்களது கைகளை கட்டி போட்டு சிறை வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் ரூ. 1 கோடி எடுத்து வர சொல்லுமாறும் இல்லையென்றால் இருவரையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.இதற்கிடையே கணியாம்பூண்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் நடமாடுவதாக அனுப்பர்பாளைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்குள்ள வீட்டில் நந்தகோபால், ராமமூர்த்தி அடைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் மீட்டனர். நந்த கோபால் காரும் கைப்பற்றப்பட்டது.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த கார்த்தி காரையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை அறிந்த டென்னிஸ், செல்வா, கார்த்தி ஆகிய 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். ரகு மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை கைது செய்தனர்.

    தப்பி ஓடிய 3 பேரையும் பிடிக்க உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஒரு தனிப்படையினர் கோவைக்கும் விரைந்து உள்ளனர். நந்த கோபாலை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கணியாம்பூண்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளனர்.அதன் உரிமையாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் வீட்டை பார்க்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர். அவரும் வேறு ஒருவர் மூலம் சாவியை கொடுத்துள்ளார்.

    அங்கு தான் நந்தகோபால், ராமமூர்த்தியை கடத்தி வைத்து உள்ளனர்.

    தலைமறைவாக உள்ள 3 பேர் மீதும் திருப்பூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #tamilnews
    ×